மதுரையில் ரவுடி காளீஸ்வரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. 18 murders in Madurai in 22 years
மதுரை அருகே தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் கடந்த 22ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். 18 murders in Madurai in 22 years
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். 18 murders in Madurai in 22 years
போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழிக்காகவே இந்த கொலை நடந்திருப்பது, நெருங்கிய உறவினர்களுக்கு இடையே வெடித்த கோஷ்டி மோதலால் தொடர்ந்து கொலைகள் நடப்பதும் தெரியவந்துள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல இதுவரை 18 கொலைகள் நடந்திருக்கின்றன.
கோஷ்டி மோதலால் தொடர் கொலைகள் 18 murders in Madurai in 22 years
இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது,
“ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் அரியமங்கலம் ஊராட்சியில் உள்ள கருத்தரிவான் குக்கிராமத்தில் வசித்த ராஜபாண்டியும், அரியமங்கலத்தைச் சேர்ந்த வி.கே. குருசாமியும் நெருங்கிய உறவுக்காரர்கள். மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் 40 ஆண்டுகளுக்கு முன்பே, மதுரை மேல அனுப்பானடி பகுதியில் தனித் தனியாக குடியேறினார்கள். 18 murders in Madurai in 22 years
இரண்டு பேரும் ஆரம்ப பள்ளிப் படிப்பை மட்டுமே படித்திருந்தனர். இதனால் மதுரையில் ரிக்ஷா ஓட்டுவது, மிதிவண்டியில் (ட்ரை சைக்கிள்) மூட்டை ஏற்றி இறக்கும் வேலையை செய்து வந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்ந்ததும் வட்டிக்கு பணத்தை விட்டு வாங்கும் தொழிலில் இறங்கினர். இதில் இருவருக்கும் தனி தனி குரூப் உருவானது.
ஆரம்பத்தில் வி.கே. குருசாமி திமுகவில் தீவிரமாக செயல்பட்டவர், மு.க.அழகிரிக்கு வலதுகரமாக இருந்தவர். கட்டப்பஞ்சாயத்து செய்துவந்தார். திமுக ஆட்சி காலத்தில் வி.கே.குருசாமி, மதுரை கிழக்கு மண்டல சேர்மனாக செயல்பட்டார்.

ராஜபாண்டி அதிமுக ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இவர், அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை கிழக்கு மண்டல சேர்மனாக செயல்பட்டார். இதனால், மதுரை கிழக்கில் கட்சி கொடிகள் கட்டுவது, போஸ்டர் ஒட்டுவதில் இரு கோஷ்டிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தன.
இந்தநிலையில் 2003ல் ராஜபாண்டி ஆதரவாளரும் உறவினருமான சின்ன முனுசு என்ற முனுசாமியை வி.கே.குருசாமி ஆட்கள் கொலை செய்தனர். இந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் முனுசாமியின் தம்பியும் ராஜபாண்டியின் ஆதரவாளருமான காளீஸ்வரன் என்ற வெள்ளைகாளி, வி.கே.குருசாமியின் ஆதரவாளர்களான மூர்த்தி, ரமேஷ், மாரிமுத்து ஆகிய மூன்று பேரையும் 2008ல் கொலை செய்தார். 18
ers in Madurai in 22 years

அதைத்தொடர்ந்து வி.கே.குருசாமியின் தங்கையின் கணவர் பாம்பு பாண்டியையும் கொலை செய்தனர். 18 murders in Madurai in 22 years
இந்த கொலைகளுக்கு பழிக்கு பழி வாங்க, வி.கே.குருசாமியின் ஆதரவாளர்கள், ராஜபாண்டி ஆதரவாளரான மொட்டை மாரி என்பவரை 2015ல் கொலை செய்தனர்.
இந்த கொலைக்கு பழி வாங்க, அதே 2015ல் ராஜபாண்டி தரப்பு, வி.கே.குருசாமி ஆதரவாளரான பெரிய முனுசாமியை கொலை செய்தார்.
தொடர்ந்து, 2016ல் வி.கே.குருசாமி மருமகனான காட்டுராஜா என்கிற முத்துராமலிங்கத்தை கொலை செய்தனர் ராஜபாண்டியின் ஆதரவாளர்கள்.
2017ல் ஜூன் மாதம் ராஜபாண்டி மகன் முனுசாமி என்ற தொப்பிலியை கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்து வி.கே.குருசாமி ஆதரவாளர்கள் எரித்துவிட்டனர்.
இதனால் ராஜபாண்டி ஆதரவாளர்கள், வி.கே.குருசாமி குடும்பத்தை குறிவைத்து, அவரது மருமகனான எஸ்.எஸ்.பாண்டியனை கொலை செய்தனர்.
இதுபோன்று இரு பக்கமும் தொடர்ந்து கொலைகள் நடந்து வந்ததால், அவர்களது சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் இரு தரப்பிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். 18 murders in Madurai in 22 years
அப்போது வி.கே.குருசாமி, ‘முனுசாமி தம்பியும் ராஜபாண்டி ஆதரவாளருமான வெள்ளைகாளி சிறையில் இருக்கிறார். அவருக்கு நான் 2 கோடி ரூபாய் கொடுத்துவிடுகிறேன். இனி கொலைகள் வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.
இந்த தகவல் வெள்ளைகாளிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் வெள்ளைக்காளி, “எங்களுக்கு பணமெல்லாம் வேண்டாம். வி.கே.குருசாமியை போட்டுவிட்டு, அந்த குடும்பத்துக்கு இரண்டு கோடி ரூபாய் கொடுக்கிறேன். வாங்கிக்க சொல்லுங்கள். அப்படி வேண்டுமானால் சமாதானம் ஆகலாம்” என்றிருக்கிறார்..
இந்த தகவல் குருசாமி காதுக்கு சென்றதும், அவர் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து ராஜபாண்டியையும் வெள்ளைகாளியையும் கொலை செய்ய திட்டமிட்டார்.
இதை தெரிந்துகொண்ட வெள்ளைகாளியும், ராஜபாண்டியும் உஷாராகி, வி.கே.குருசாமியை போட்டுத்தள்ள திட்டமிட்டனர். இதுபோன்று, மீண்டும் இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் கொலை செய்ய திட்டமிட்டு நேரம் பார்த்து வந்தனர்.
இந்தநிலையில் 2023 செப்டம்பர் மாதம் வி.கே.குருசாமி மதுரை நீதிமன்றத்துக்கு வந்துவிட்டு பாதுகாப்புக்காக பெங்களூருவுக்கு சென்றார். பெங்களூருவில் கம்மன்னஹல்லி சத்சாகர் ஓட்டலில் தங்கியிருந்த வி.கே.குருசாமியை, இங்கிருந்து பின்தொடர்ந்து சென்ற 10 பேர் கொண்ட கும்பல் தலை முகத்தை சிதைத்துவிட்டு, இறந்துவிட்டார் என்று நினைத்து தப்பிவிட்டது.
இந்தசூழலில் குருசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் மதுரையில் உள்ள வீட்டிலேயே தங்கியிருக்கிறார். தற்போது வரை முகத்தை எங்கும் காட்டாமல் இருந்து வருகிறார்.
ஆனால் விடாத ராஜபாண்டி தரப்பு, வி.கே.குருசாமிக்கு வலதுகரமாக உள்ள சகோதரி பையனான கிளாமர் காளி என்ற காளீஸ்வரனை போட்டுத்தள்ள திட்டமிட்டனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு, காளீஸ்வரனை ராஜபாண்டி குரூப் கொலை செய்துவிட்டது” என்கிறார்கள் மதுரை போலீஸ் வட்டாரத்தில்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட காளீஸ்வரனின் இளைய மனைவி மீனாட்சி அஸ்டம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வி.கே.குருசாமியின் தங்கை பஞ்சவர்ணம் மகன் தான் காளீஸ்வரன். மூத்த மனைவி மணிமேகலை தனது இரு பிள்ளைகளுடன் தனியாக மாமியார் வீட்டில் வசித்து வருகிறார்.
கடைசியாக நடந்தது என்ன?

காளீஸ்வரன் மேல அனுப்பனாடியில் ரேஷன் குடோனில் வேலை செய்து வந்தார். 20ஆம் தேதி மதுரைக்கு கோர்ட்டு விஷயமாக சென்றுவிட்டு மீண்டும் 22ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெங்கலமூர்த்தி நகரில் உள்ள வீட்டுக்கு வந்தார். இரவு 8.30 மணிக்கு கடைக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றவரை, இரவு சுமார் 9.30 மணியளவில் வீட்டு அருகில் உள்ள பாறை முனீஸ்வரன் கோயில் அருகில் காரில் வந்த கும்பல் வெட்டிவிட்டு சென்றது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த காளீஸ்வரன் மீது இரண்டு கொலை வழக்கு, கொலை முயற்சி, ஆட்கடத்தல் என 10 வழக்குகள் உள்ளன.
ராஜபாண்டிக்கும், குருசாமிக்கும் இடையே இருந்த பகையால் சுமார் 18க்கும் கொலைகள் அரங்கேறியுள்ளது. வி.கே.குருசாமி இரண்டு மருமகன், தங்கை மகனையும் இழந்துவிட்டார். ராஜபாண்டி மகன், மச்சான், நண்பர்கள் ஆகியோரை இழந்துவிட்டார். இரண்டு தரப்பும் உறவுகள் வாரிசை இழந்துள்ளன.
நெருங்கிய உறவுக்காரர்களுக்கு இடையே நடந்த இந்த கொலைவெறியாட்டம் மதுரையையே பதற்றமடையச் செய்துள்ளது.