தமிழகத்தில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் 17,000 போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று (பிப்ரவரி 17) நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான சட்ட அமலாக்க நடவடிக்கைகளும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 5 ஆண்டுகளில் போதைப்பொருளுக்கு எதிராக 5.17 லட்சம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த, “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” என்ற இயக்கத்திற்கு ஒரு போதைப்பொருள் ஒழிப்பு மேலாண்மை அலகு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில் 17,000 போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக செயல்பட, விழிப்புணர்வு தூதுவர்களாக 4,00,000 லட்சம் மாணவர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.
