தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் தேதியை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தற்போது (மார்ச் 15) நடத்தி வருகிறார்.தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 5 மாநிலங்களிலும் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் வாக்காளர்கள்
மொத்த வாக்காளர்கள்: 5,67,07,380 (5.67 கோடி)
ஆண் வாக்காளர்கள் : 2,77,38,925
பெண் வாக்காளர்கள்: 2,89,60,838
மூன்றாம் பாலினத்தவர்: 7,617
புதிய வாக்காளர்கள்: (18-19 வயது)12.51 லட்சம்
மூத்த குடிமக்கள்: (85 வயதுக்கு மேற்பட்டோர்) 3.99 லட்சம்
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்: 4.63 லட்சம்
புதுச்சேரி வாக்காளர்கள்
மொத்த வாக்காளர்கள்: 10.27 லட்சம்
ஆண் வாக்காளர்கள்: 4.83 லட்சம்
பெண் வாக்காளர்கள்: 5.43 லட்சம்
மூன்றாம் பாலினத்தவர்: 170
கேரளா வாக்காளர்கள்
மொத்த வாக்காளர்கள்: 2.67 கோடி
ஆண் வாக்காளர்கள்: 1.29 கோடி
பெண் வாக்காளர்கள்: 1.37 கோடி
மூன்றாம் பாலினத்தவர்: 250
அஸ்ஸாம் வாக்காளர்கள்
மொத்த வாக்காளர்கள்: 2.33 கோடி
ஆண் வாக்காளர்கள்: 1.18 கோடி
பெண் வாக்காளர்கள்: 1.14 கோடி
மூன்றாம் பாலினத்தவர்
மேற்கு வங்க வாக்காளர்கள்
மொத்த வாக்காளர்கள்: 7.32 கோடி
ஆண் வாக்காளர்கள்: 3.73 கோடி
பெண் வாக்காளர்கள்: 3.59 கோடி
மூன்றாம் பாலினத்தவர்
5 மாநிலங்களில் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. சுமார் 25 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.
