ஈரான்- இஸ்ரேல் இடையேயான போரினால் ஈரான் நாட்டில் தவித்த 15 தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தமிழ்நாடு திரும்பினர். Iran Tamil Nadu Fishermen
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளதாவது: ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையே போர் பதற்றச் சூழல் நிலவும் நிலையில், ஈரானில் பந்தர் இ.சிறுயியா (Bandar-e-Chiruiyeh) மற்றும் கிஷ் (kish) தீவில், தென் தமிழகத்தைச் சேர்ந்த 15 இந்திய மீனவர்கள் சிக்குண்டனர். அவர்களை பத்திரமாக மீட்டுத் தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும்கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி
தமிழக பாஜக சார்பில் கடிதம் எழுதினேன்.

நமது தமிழக பாஜக-வின் சீரிய முன்னெடுப்பிலும் பயணச் செலவிலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த மீனவர்களை பாஜக மேலிட பொறுப்பாளர் டாக்டர். அரவிந்த் மேனனுடன் வரவேற்று அவர்களை வீட்டுக்கு வழியனுப்பி வைத்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.