இந்த ஆண்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக 13,720 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகத் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2024-25ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 19) தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார்.
பட்ஜெட் உரையில், “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு இந்த ஆண்டு 13,720 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளுக்கும் விடியல் பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
மகளிரின் பேராதரவு பெற்ற இத்திட்டத்திற்கான மானியத்தொகையாக 3,050 கோடி ரூபாயை 2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கியுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் மூவலூர் ராமமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இந்த ஆண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த 370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தமிழ்நாடு பட்ஜெட் 2024: சென்னை… டிராபிக் ஜாம்- அகலப்படுத்தப்படும் சாலைகள்!