காற்றுமாசுபாட்டை குறைக்கும் நோக்கில் தமிழகத்தில் முதல் முறையாக ரூ.207.90 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் சென்னையில் இன்று ஜூன் 30-ந் தேதி முதல் இயக்கப்பட்டுள்ளன. இந்த மின்சாரப் பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். Electric Buses Chennai
மேலும் ரூ47.50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மொத்தம் 625 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும். வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூவிருந்தவல்லி, மத்திய பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 பணிமனைகள் மூலம் மின்சாரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.697.00 கோடி.

சென்னை மின்சாரப் பேருந்தில் என்னென்ன வசதிகள் உள்ளன?
- ஒருமுறை சார்ஜ் செய்தால் குளிர்சாதனமில்லா பேருந்து 200 கி.மீ. இயங்கும்.
- மின்சாரப் பேருந்துகளில் பேருந்தின் தரைத் தளத்தை கீழே இறக்கி மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் எளிதாக ஏறி, இறங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் எளிதாக அமரக்கூடிய வகையில் இருக்கைகள் சமதள உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
- இருக்கைகளின் பக்கவாட்டு இடைவெளி அகலமாக அமைக்கப்பட்டுள்ளது.
- இரண்டு கேமராக்கள் முன் பகுதியிலும், ஒரு கேமரா பின்புறமும் என மொத்தம் 7 சிசிடிவி கேமராக்கள்
- பயணிகளின் இருக்கைகளில் சீட் பெல்ட்
- ஒவ்வொரு இருக்கையின் கீழ் மொபைல் சார்ஜர்
- பேருந்து நிறுத்தங்கள் குறித்து தானியங்க அறிவிப்பு
- ஜி.பி.எஸ். வழியாகச் செயல்படும் சிக்னல் அமைப்பு
- பெரிய எல்.இ.டி திரைகள் மூலமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழித்தடங்கள் அறிவிப்பு