பத்தாம் வகுப்பு துணை தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10th suplementary exam date
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 16) வெளியாகின. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 95.88 சதவிகிதமும், மாணவர்கள் 91.74 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில் மூன்று மாணவிகள் ஒரே மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, அரியலூர் மாணவி சோஃபியா, உடுமலைப்பேட்டை மாணவி திவ்யா லட்சுமி 499/500 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேருமே 4 பாடங்களில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மனிஷ் குமார் என்ற மாணவன் 498ன் மதிப்பெண் பெற்றிருக்கிறார்.

இந்தநிலையில் தேர்வாகாத மாணவர்களுக்கு துணை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் ஜூலை 4 ஆம் தேதி மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறும். ஜூலை 5ஆம் தேதி விருப்ப மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறும்.
ஜூலை 7ஆம் தேதி ஆங்கிலம், ஜூலை 8ஆம் தேதி கணிதம், ஜூலை 9ஆம் தேதி அறிவியல், ஜூலை 10ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என்று அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10th suplementary exam date