உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் கடந்த மே 14-ஆம் தேதி பதவியேற்றார். இந்தநிலையில், மகாராஷ்டிராவில் தலைமை நீதிபதிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் தலைமை செயலாளர், காவல்துறை ஆணையர் கலந்து கொள்ளாதது குறித்து அம்மாநில அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று விசிக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Chief Justice BR Gavai Insulted in Maharashtra
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“தலைமை நீதிபதி கவாய் அவர்கள் மும்பையில் இன்று தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றுப் பேசும்போது வழக்கமான அரசாங்க மரபு ஒழுங்குகளில் ( protocol) தனக்கு நம்பிக்கை இல்லை எனினும் “ அரசியலமைப்பின் அங்கங்கள் ஒவ்வொன்றும் மற்ற அங்கங்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்த வேண்டும்.
இந்த மாநிலத்தின் மகன், நாட்டின் தலைமை நீதிபதியாகி முதல் முறையாக மகாராஷ்டிரா வரும்போது, மாநிலத்தின் தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் முதலானவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பவில்லையென்றால், அதை அவர்களின் அறிவார்ந்த சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். “ இத்தகைய சிறிய பிரச்சனைகளில் நான் கவனம் செலுத்த விரும்பவில்லை. இருந்தாலும் இதை சுட்டிக்காட்டத் தோன்றியது” என அவர் தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதியின் நிகழ்ச்சியைப் புறக்கணித்தது மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளர், காவல் ஆணையர் ஆகியோரின் தனிப்பட்ட முடிவா? அல்லது மகாராஷ்டிர மாநில அரசு அவர்கள் அப்படி அவமரியாதை செய்ததை ஆதரிக்கிறதா? என்பதை மகாராஷ்டிர மாநில அரசு விளக்கினால்தான் நாட்டுக்குத் தெரியும்” என்று தெரிவித்துள்ளார். Chief Justice BR Gavai Insulted in Maharashtra