தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு நடைபெறும் மதுரையில் தற்போது 102 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது.
தவெகவின் இந்த மாநாட்டுக்கு பந்தல் அமைக்கப்படவில்லை. இதனால் நேற்று முதலே வந்து குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் வெயிலில் வாடி வதங்கினர்.
அத்துடன் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள நூதன வழிகளில் பதுங்கினர்.
- நாற்காலிகள் போடப்படுவதற்காக விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்புகளை எடுத்து அதையே தற்காலிக கூடாரங்களுக்கான மேற்கூரையாக்கிக் கொண்டனர்.
- வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் லாரிகளுக்கு அடியில் படுத்துக் கொண்டனர்
- ஒலி பெருக்கிகள், பிரம்மாண்ட மின் விளக்குகள் ஆகியவற்றின் நிழல்களில் ஒதுங்கி நின்றனர்
- பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட பேரிகார்டுகளான தடுப்புகளின் நிழல்களிலும் கூட தவெக தொண்டர்கள் பதுங்கும் பரிதாப நிலையை பார்க்க முடிந்தது.
- பேரிகார்டுகளில் பெட்ஷீட்டுகளை கட்டி தற்காலிக கூடாரங்களை பெண்கள் அமைத்திருக்கின்றனர்
- வெளுத்தெடுக்கும் வெயிலில் மழை கொட்டிவிடக் கூடாது என சில ‘வினோத’ வழிபாடுகளையும் தவெக தொண்டர்கள் நடத்தினர்.
- இந்த மாநாட்டில் பங்கேற்கும் விஜய், அவரது பெற்றோர் மற்றும் விஜய்யின் நண்பர்களுக்காக மேடையின் பின்புறம் 5 கேரவன்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.