கூடுதலாக 1000 ரூபாய்… ரூ. 1 லட்சம் மானியம் : சட்டப்பேரவையில் வெளியான அறிவிப்புகள்!

Published On:

| By Kavi

தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர்கள் நலத்துறை சார்பில் 11 அறிவுப்புகளை துறை அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்டார். Women and Transgenders to Get 1 Lakh Subsidy

தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர்கள் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஏப்ரல் 9) நடைபெற்றது.

அப்போது கட்டுமான தொழிலாளர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் கணேசன்.

அந்த அறிவிப்பில், Women and Transgenders to Get 1 Lakh Subsidy

“திருக்குவளை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் தங்கி பயிலும் வண்ணம் ரூ.3.50 கோடியில் புதிய மாணவர் விடுதி கட்டடம் கட்டப்படும்.

தமிழ்நாட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் திறன் பயிற்சி பெறுவதற்கான சூழலை மேம்படுத்தும் பொருட்டு, 32 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் பழைய கட்டடங்களின் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.67.64 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.

தொலைதூரப் பகுதிகளிலிருந்து வந்து பயிலும் மாணவர்களின் வசதிக்காக, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலுள்ள 50 விடுதிகள் ரூ.22.98 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

Women and Transgenders to Get 1 Lakh Subsidy

கட்டுமானத் தொழிலாளர்கள் அவர்களது அன்றாடப் பணி தொடர்பாக அதிக அளவில் காலையில் கூடி காத்திருக்கும் இடங்களில், கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 வசதி மையங்கள் ரூ.20.25 கோடி செலவில் அமைக்கப்படும்.

கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக இருந்து 60 வயது பூர்த்தி அடைந்து, குடும்பத்தினரின் கவனிப்பும் பராமரிப்பும் இல்லாத, கட்டுமானத் தொழிலாளர்கள் தலா 50 நபர்கள் தங்கும் வகையில் உணவு மற்றும் உறைவிட வசதிகளுடன் சென்னையில் இரண்டு முதியோர் இல்லங்கள் தொடங்கப்படும்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பணியிடத்து விபத்து மரண உதவித் தொகை 5 இலட்சம் ரூபாயிலிருந்து 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகைகளோடு கூடுதலாக, செவிலியர் பட்டயப் படிப்பு பயில ரூ.3,000, உணவு தயாரித்தல் மற்றும் சேவை பட்டயப் படிப்பு பயில ரூ.3,000 கல்வி உதவித் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முறையான பட்டப்படிப்பு, முறையான பட்ட மேற்படிப்பு, தொழிற் கல்வி பட்டப்படிப்பு மற்றும் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பு போன்ற உயர்கல்வி பயில தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை கூடுதலாக ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முனைவர் பட்டப்படிப்பு பயிலும் நேர்வில் ஒரு கல்வி ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

பெண்கள் தன்னிம்பிக்கையோடு ஆட்டோ ஓட்டும் சுயதொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறுவதை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண், திருநங்கை ஓட்டுநர்கள் சொந்தமாக புதிய ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா ஒரு இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த, கட்டுமான வேலை, கம்பி வளைப்பு வேலை, தச்சு வேலை, மின்பணியாளர் வேலை, பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட பல தொழில் இனங்களில் ஏழு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊதியத்துடன், 50,000 தொழிலாளர்களுக்கு ரூ.45.21 கோடி வழங்கப்படும். Women and Transgenders to Get 1 Lakh Subsidy

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share