100 சதவிகிதம் என்.டி.ஏவுக்குதான் வெற்றி : தொகுதி பட்டியலை வெளியிட்ட பிறகு ஈபிஎஸ் பேட்டி!

Published On:

| By Kavi

சட்டமன்ற தேர்தலில் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்  என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

என்.டி.ஏ.கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து சென்னையில் செய்தியாளார்களிடம் அவர் பேசுகையில்,  “எங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. 210 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம். திமுக ஆட்சியில் மக்கள் வேதனையும், துன்பத்தையும் தான் அனுபவித்தார்கள். நாங்கள் 2011 முதல் 2021 வரை நிறைய திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு நன்மைகளை செய்திருக்கிறோம்.  மக்களிடம் எங்களுக்கு வரவேற்பு இருக்கிறது. 100 சதவிகிதம் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. திமுக அதிக கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தாலும் யார் நல்லதை செய்வார்கள் என்று தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறினார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share