0.12 விநாடியில் ஒரு ஸ்டம்பிங்… வயசானாலும் வேகம் குறையாத தோனி

Published On:

| By Kumaresan M

சர்வதேச கிரிக்கெட்டில் தோனி விளையாடாத நிலையிலும் அவரது விக்கெட் கீப்பிங் திறன் அபாரமாக உள்ளது. மும்பை அணிக்கு எதிராக நூர் அகமது வீசிய 11-வது ஓவரில் பெரிய ஷாட் ஆட முயன்றார் சூர்யகுமார் யாதவ். இதற்காக, கிரீஸை விட்டு இறங்கி முன்னால் சென்றார்.

ஆனால், பந்து நன்றாக திரும்ப, ஸ்டம்புக்கு பின்னால் நின்ற தோனி பந்தை பிடித்து 0.12 விநாடிகளில் ஸ்டம்புகளை தகர்த்தார். 43 வயதில் இவ்வளவு வேகமாக செயல்பட்டது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.0.12 seconds stumping by dhoni

2012 ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் 0.09 விநாடிகளில் ஸ்டம்பிங் செய்துள்ளார். அதே போல, 2018 ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தோனி வெஸ்ட் இண்டிஸ் வீரர் கீமோ பாலை 0.09 விநாடிகளில் ஸ்டம்பிங் செய்திருக்கிறார் தோனி. இதுதான், சர்வதேச கிரிக்கெட்டில் வேகமான செய்யப்பட்ட ஸ்டம்பிங் ஆகும். இப்போது, வரை இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.

ஐ.பி.எல். தொடரை பொறுத்த வரை, தோனி 0.01 டைமிங்கில் ஒரு விக்கெட்டை அவுட் செய்துள்ளார். அப்படி அவுட் ஆனவர் குஜராத் டைட்டனின் சுப்மன் கில். 2023 ம் ஆண்டு தொடரில் இது நடந்தது. 0.12 seconds stumping by dhoni

தோனியின் துல்லிய செயல்பாட்டை பலரும் பாராட்டியுள்ளனர். ஆஸ்திரேலிய முன்னாள வீரர் ஹேடன் பேசுகையில், . “ தோனிக்குள் அந்த ஃபயர் இன்னும் அப்படியே உள்ளது. நூர் அகமது பந்தை லெக் திசையில் வீசிக் கொண்டிருந்தார். பேட்ஸ்மேன் முன்னாள் இருப்பதால் பகுதி அளவில் மறைக்கப்பட்டிருக்கும் நிலையில் பந்தை பிடித்து ஸ்டம்ப் செய்தது அபாரமான விஷயம் ஆகும். நல்ல டைமிங்கில் இந்த ஸ்டம்பிங் செய்யப்பட்டுள்ளது ‘ என்று பாராட்டியிருக்கிறார்.

ஸ்டம்புக்கு பின்னால் தோனி இருந்தால் பந்து மிஸ்ஸானால் பெவிலியன் உறுதிதான் என்று அவரின் டைஹார்ட் ரசிகர்கள் மெச்சுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share