“ஐடி ஃபீல்டுல இருக்கேன்… ஆனா ஒரு நல்ல புராடெக்ட் கம்பெனில (Product Company) வேலைக்குச் சேரணும்ங்கறது என் கனவு!” என்று நினைக்கும் இளைய தலைமுறையினரா நீங்கள்?
உங்கள் கனவை நனவாக்கும் விதமாக, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான ஜோஹோ (Zoho Corporation) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனுபவம் வாய்ந்த ஜாவா டெவலப்பர்களுக்குக் கதவு திறந்திருக்கிறது!
வேலை விவரம்:
- பதவி: ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Java Full Stack Developer).
- இடம்: சென்னை (Zoho Campus, Chennai).
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்த வேலைக்கு ஃப்ரெஷர்ஸ் (Freshers) விண்ணப்பிக்க முடியாது. குறைந்தபட்ச அனுபவம் அவசியம்.
- அனுபவம்: மென்பொருள் மேம்பாட்டுத் துறையில் 1 முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டும்.
- கல்வித் தகுதி: பி.இ/பி.டெக் (B.E/B.Tech), எம்.சி.ஏ (MCA) அல்லது கணினி அறிவியல் சார்ந்த படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் திறன்கள் (Skills Required):
வெறும் அனுபவம் மட்டும் போதாது, கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களில் நீங்கள் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்.
- Core Skills: ஜாவா (Java) ப்ரோக்ராமிங் மற்றும் ஆப்ஜெக்ட் ஓரியண்டட் டிசைனில் (OOPS) நல்ல அறிவு இருக்க வேண்டும்.
- Web Technologies: ஸ்பிரிங் பூட் (Spring Boot), ஹைபர்னேட் (Hibernate) தெரிந்திருக்க வேண்டும்.
- Frontend: HTML, CSS, ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் ஆங்குலர் (Angular) அல்லது ரியாக்ட் (React) போன்ற ஃப்ரேம்வொர்க்கில் அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு.
- Database: MySQL அல்லது PostgreSQL போன்ற தரவுத்தளங்களை கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் ஜோஹோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான zoho.com/careers பக்கத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்கள் மட்டும் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
தம்பிங்களா… ஜோஹோ இன்டர்வியூனாலே கொஞ்சம் டஃப் (Tough) ஆகத்தான் இருக்கும். குறிப்பா ‘ப்ராப்ளம் சால்விங்’ (Problem Solving) ஸ்கில்ஸ் ரொம்ப எதிர்பார்ப்பாங்க. நீங்க 1 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் வச்சிருந்தாலும், பேசிக் கோடிங்ல ஸ்ட்ராங்கா இருந்தாதான் அடுத்த ரவுண்டுக்கு போக முடியும்.
ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் ரோல்ங்குறதால, உங்களோட பழைய ப்ராஜெக்ட்ல நீங்க என்ன பண்ணீங்கங்குறத தெளிவா சொல்லத் தயாரா இருங்க. சர்வீஸ் கம்பெனில இருந்து புராடெக்ட் கம்பெனிக்கு மாற இது ஒரு கோல்டன் சான்ஸ். உடனே அப்ளை பண்ணுங்க!
