பாலிவுட் படங்களிலே அதிகமாய் நடித்திருந்தாலும் தமிழில் மாதவனுடன் `யாவரும் நலம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நீது சந்திரா. அதன் பிறகு விஷாலுடன் `தீராத விளையாட்டுப் பிள்ளை’ திரைப்படத்தில் நடித்தவர், மிஷ்கினின் `யுத்தம் செய்’ படத்தில் `கன்னித்தீவு பொண்ணா’ பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அமீர் இயக்கத்தில் `ஆதி பகவன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு இணையாக நடித்தார். இப்படத்தின் நடிப்பினால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சிறப்புத் தோற்றங்களில் வரும் வாய்ப்புகளே கிடைத்தது. சமீபத்தில் `வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். படம் பெரிதளவில் ஹிட்டாகாததால் இவரின் கேரக்டர் பெரிதாகப் பேசப்படவில்லை. இதனையடுத்து ஹாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்து வந்த நீது சந்திரா கோலிவுட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
பி.எஸ்.விஜய் குமார் இயக்கும் `பிரம்மா.காம்’ திரைப்படத்தில் நகுலுடன் இணைந்து நடித்து வருகிறார். இதுகுறித்து Times of india-க்கு அளித்துள்ள பேட்டியில், நகுல் நடித்துள்ள இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நீண்ட நேரம் படத்தின் காட்சிகளில் நடித்துள்ளேன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் நடனமாடி இருந்தேன். நிறைய பேர் கோலிவுட்டில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே ஏன் நடிக்கிறீர்கள்? எனக் கேட்கிறார்கள். பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்த போதும், கோலிவுட் ரசிகர்கள் என்னை மறந்து விடக் கூடாது என்பதற்காகவே சிறப்பு தோற்றத்தில் இடம்பெறவுள்ள படங்களிலும் நடித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.�,”