ADVERTISEMENT

யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

YouTuber Savukku Shankar arrested

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினரை ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

சவுக்கு சங்கர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 13) பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT
வழக்கு விபரம்

ரெட் அண்ட் ஃபாலோ என்ற திரைப்படம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன், சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது அந்த வீடியோவை நீக்க 10 லட்சம் பணம் கேட்டதாகவும், இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையில் சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினர் தயாரிப்பாளர் புருஷோத்தமனை அடித்து அவர் கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறித்து விட்டதாகவும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
சவுக்கு சங்கர் விளக்கம்

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள சவுக்கு சங்கர், ” இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய் வழக்கு. இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. நீங்கள் சொல்லும் புருஷோத்தமன் என்ற யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை. இதை எனது விளக்கமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று நவம்பர் 1 ம் தேதி பதில் கடிதம் அனுப்பிவிட்டேன்.

இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று இரவு வெளியிட்டுள்ளதால் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share