தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பங்களாவின் மொட்டை மாடியில் பதுங்கி இருந்த நபரை பிடித்து மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
நடிகர் விஜய் பங்களா, சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ளது. இந்த பங்களாவுக்குள் நேற்று திடீரென நுழைந்த இளைஞர், விறுவிறுவென மொட்டை மாடிக்கு சென்று பதுங்கிக் கொண்டார்.
அந்த இளைஞரை சிறிது நேரம் தேடிய பாதுகாவலர்கள், மொட்டை மாடியில் பதுங்கி இருந்த போது பிடித்தனர்.
விஜய் பங்களாவில் மொட்டை மாடியில் பதுங்கி இருந்த நபரின் பெயர் அருண் (வயது 24). மதுராந்தகத்தைச் சேர்ந்தவர்.
அருண் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் 4 ஆண்டுகளாக லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இதனால் அருண், மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.