இயற்கையாக நமக்கு கிடைக்கும் தயிர், கற்றாழை ஆகியவை மூலமாக பொடுகை கட்டுப்படுத்திவிடலாம்.
பொடுகு என்பது ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. தலையில் இருந்து விழும் வெள்ளை நிற பொடுகு செல்கள் நம்மை எரிச்சல் மற்றும் கவலையடையச் செய்கின்றன. பொடுகு (Dandruff) காரணமாக தலை அரிப்பு, எரிச்சல் ஆகியவை ஏற்பட்டு நம்மை நிம்மதி இழக்கச் செய்கின்றன. மேலும், பொடுகு அதிக முடி உதிர்தலை ஏற்படுத்துவதால் இன்னும் கவலை கூடுகிறது.
பொடுகை குறைக்க விலை உயர்ந்த ஷாம்புக்கள், பொடுகு ட்ரீட்மெண்ட் ஆகியவை எடுத்தாலும் சில நாட்களில் மீண்டும் வந்துவிடுகின்றன. ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பல ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனங்கள் உங்கள் தலைமுடிக்கு நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். அதே சமயம் பொடுகைக் குறைக்க நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையாக ஒரு ஜெல் தயாரித்துவிடலாம்.
பொடுகு குறைக்க ஜெல் தயாரிக்க தேவையான பொருட்கள் (dandruff reduce gel Ingredients) : பொடுகைக் குறைக்கும் ஜெல் தயாரிக்க நம் வீட்டிலேயே கிடைக்கும் தயிர், புதிய கற்றாழை ஜெல், கடுகு எண்ணெய் ஆகியவை நமக்கு தேவைப்படுகிறது.
ஜெல் தயாரிப்பது எப்படி (how to make dandruff reduce gel) : முதலில் ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது தயிரில் புதிய கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும். இறுதியாக, கடுகு எண்ணெயைச் சேர்த்து, இந்த மூன்று பொருட்களையும் நன்றாகக் கலக்க வேண்டும். பிறகு அதை முடி வேர்களில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை தடவ வேண்டும். இதற்குப் பிறகு உங்கள் தலைமுடியை மென்மையான ஷாம்பூவால் கழுவ வேண்டும்.
பொடுகுக்கு வீட்டில் தயாரித்த ஜெல் எப்படி பயனுள்ளதாக இருக்கும்? (gel effective for dandruff) : தயிரில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. லாக்டிக் அமிலம், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இதனால்தான் தயிர் பொடுகைக் குறைக்க உதவிபுரிகிறது. இது உச்சந்தலையை ஈரப்பதமாக்கி, அரிப்பு மற்றும் வறட்சியைத் தடுக்கும். தயிர் பல வழிகளில் கூந்தலுக்கு நன்மை பயக்கும். கற்றாழை ஜெல் முடிக்கு நன்மை அளிக்கிறது. இது பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நீரேற்றும் பண்புகளைக் கொண்டுள்ளது.இது உச்சந்தலையின் pH அளவை சமநிலைப்படுத்துகிறது, அரிப்பைக் குறைக்கிறது, அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது, மேலும் உரிதலையும் குறைக்கிறது. இதன்மூலம் பொடுகை எளிதில் கட்டுப்படுத்திவிடலாம்.
