தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மட்டுமே தேர்தலில் வெற்றியைத் தரும் என நம்புவது ‘மூடநம்பிக்கை‘ என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்துள்ளார்.
பிரவீன் சக்கரவர்த்தி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டதக்கது ஆனால், அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன; 5 தோல்வியடைந்தன. இவ்வாறு பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
