பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி நீடிக்குமா? நாளை வாக்கு எண்ணிக்கை

Published On:

| By Mathi

Bihar Counting

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை நவம்பர் 14-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6-ந் தேதியும் 2-ம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11-ந் தேதியும் நடைபெற்றது. 121 தொகுதிகளில் நவம்பர் 6-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் 64.66% வாக்குகள் பதிவாகின நவம்பர் 11-ந் தேதி 122 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 68.79% வாக்குகள் பதிவாகின. பீகாரில் முன்னெப்போதும் இல்லாத வாக்குப் பதிவு இது.

ADVERTISEMENT

பீகாரில் கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களையும் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களையும் பெற்றிருந்தன.

தற்போதைய தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் பீகாரில் மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சிதான் நீடிக்கும் என கணித்துள்ளன.

ADVERTISEMENT

பீகார் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்கும். இதனையடுத்து பீகாரில் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share