இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலையில் வைத்துள்ளது. will india create history in lords ground?
இந்த நிலையில் கிரிக்கெட்டின் தாயகம் என கருதப்படும் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து – இந்தியா அணிஅணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று (ஜுலை 10) தொடங்குகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பு லார்ட்ஸில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி படைத்துள்ள சாதனைகளை இங்கே காணலாம்.
1932 ஆம் ஆண்டு முதல் போட்டிக்குப் பிறகு, வரலாற்று சிறப்புமிக்க இந்த மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது.
அதில் 12 போட்டிகளில் இங்கிலாந்தும், 3 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டிகள் டிராவில் முடிந்தன.

அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் :
லார்ட்ஸில் அதிக ரன்கள் ரன்கள் எடுத்த இந்திய வீரர் பட்டியலில் ஜாம்பவான் பேட்ஸ்மேன் திலீப் வெங்சர்க்கார் 72.57 என்ற சராசரியில் 508 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். மேலும் லார்ட்ஸில் மூன்று டெஸ்ட் சதங்களை அடித்த ஒரே வெளிநாட்டு வீரர் என்ற பெருமையும் வெங்சர்க்கார் வசமே உள்ளது.
கடந்த 73 ஆண்டுகளில் புகழ்பெற்ற லண்டன் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு இந்தியரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையை வினூ மங்கட் வைத்திருக்கிறார். 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மங்கட் 184 ரன்கள் எடுத்தார். 270 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் இந்த ரன்களை குவித்தார். இந்த சாதனையை கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.
லார்ட்ஸில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்று வெவ்வேறு காலங்களைச் சேர்ந்த மூன்று புகழ்பெற்ற பந்து வீச்சாளர்களான பிஷன் சிங் பேடி, கபில் தேவ் மற்றும் இஷாந்த் சர்மா உள்ளனர். இவர்கள் மூவரும் இந்த மைதானத்தில் தலா 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

சிறப்பான பந்துவீச்சு :
1974 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 226 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பிஷன் சிங் பேடிபேடி.
1982 ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடந்த டெஸ்டில் கபில் தேவ் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளுடன் 168 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்ற அற்புதமான பந்துவீச்சை பதிவு செய்தார்.
2014 நடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இஷாந்த் ஷர்மா 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன்மூலம் அந்த போட்டியில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது 1986ஆம் ஆண்டுக்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் முதல் வெற்றியாக பதிவானது.