சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் செய்வது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விளக்கமளித்துள்ளார்.
வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை மாவட்டம் மாவட்டமாக சென்று விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரத்துக்கு செல்வாதால் வீக் எண்ட் பாலிடிக்ஸ் என்று விஜய்யை பலரும் விமர்சித்தனர்.
இந்தநிலையில் நாகையில் இன்று (செப்டம்பர் 20) இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், “நான், இந்த சுற்றுப்பயணத்துக்கான ப்ளானை போட்ட பிறகு, அது என்னப்பா சனிக்கிழமை… சனிக்கிழமை என்று கேட்கிறார்கள். அதுவொன்றுமில்லை உங்களை வந்து பார்க்கும் போது உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது. முக்கியமாக வேலைக்கு எந்த பாதிப்பும் இருக்ககூடாது என்பதற்காகத்தான் வார இறுதி நாளாக பார்த்து பயணத்தை திட்டமிட்டோம்.
விடுமுறை நாட்களில், ஓய்வெடுக்கக்கூடிய நாட்களில் வர வேண்டும் என்பதுதான் எண்ணமே. அதனால் சனிக்கிழமைகளில் பிரச்சாரம்“ என்று கூறினார்.
அதுமட்டுமல்ல, அரசியலில் சில பேருக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமல்லவா? எனவும் விமர்சித்தார்.