தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த நெருக்கடி, உயிரிழப்பு தொடர்பாக இன்று (செப்டம்பர் 30) தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, சுகாதாரத்துறை செயலாளர் கூறுகையில், ’7.14 நிமிடத்திற்கு முதல் அழைப்பு வந்தது. அங்கு 7.20 நிமிடத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றிருக்கிறது. 2-வது அழைப்பு 7.15 நிமிடத்திற்கு வந்தது. அங்கு 7.23 நிமிடத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றிருக்கிறது. 108–ல் உடனடியாக 6 ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டது இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸுகளும் வந்தன. மொத்தமாக 33 ஆம்புலன்ஸுகள் பயன்படுத்தப்பட்டன. ’ என்றார்.
தொடர்ந்து அமுதா ஐஏஎஸ், ‘ 2 ஆம்புலன்ஸ் கட்சித் தலைவர் வண்டிக்கு பின்னாலேயே வந்து கொண்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல், கட்சிக் காரர்களே 5 ஆம்லன்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள். மொத்தம் 7 ஆம்புலன்ஸ் கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். சுகாதாரச் செயலாளர் கூறியபடி, 6 – 108 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தெரிந்த பிறகு தான் கூடுதலாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த தகவல் எப்படி தெரிந்தது என்றால், காவலர்கள் ஃபோன் வேலை செய்யவில்லை என்றவுடன் வயர்லெஸ் மூலமாக தகவல் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
அதன் பிறகு அரசாங்க வழியாக 108 ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது. மேலும், கட்சிக்காரர்கள் ஆம்புலன்ஸ் அருகில் இருந்தபடியால் முதலில் வந்திருக்கிறது. 9.45 மணிக்கு தனியார் ஆம்புலன்ஸ் வைத்து உடனடியாக மக்களை அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்’ என்றார்.