விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். VCK Thirumavalavan
சென்னையில் ஜூலை 4-ந் தேதி விசிகவின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. ஆனால் இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே விசிக தலைவர் திருமாவளவன், “இன்றைய கூட்டத்தில் கூட்டணி பற்றியோ திமுகவிடம் எத்தனை சீட் கேட்க வேண்டும் என்பது பற்றியோ பேச வேண்டாம்.. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன.. அதனால் இவற்றை எல்லாம் அப்போது பேசிக் கொள்ளலாம்.. கட்சி வளர்ச்சி பற்றி மட்டும் இங்கே கருத்துகளை சொல்லுங்க” என கறாராக சொல்ல சிறுத்தைகளும் அதையே அச்சுபிசகாமல் செய்தனராம்.
விசிகவைப் பொறுத்தவரையில் 234 சட்டமன்ற தொகுதிகளும் மாவட்டங்களாக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மா.செ. நியமிக்கப்பட்டு தேர்தல் பணியை ஜரூராக தொடங்கிவிட்டது.
அதேநேரத்தில் நிர்வாக குழு கூட்டம் முடிந்துவிட்ட நிலையில் விசிக பொதுச்செயலாளர், பொருளாளர் நியமனங்கள் குறித்து தீவிர யோசனையில் இருக்கிறார் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
பொதுச்செயலாளர் பதவியை தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொடுக்க வேண்டும்.. இந்த பட்டியலில் எம்.எல்.ஏக்கள் எஸ்எஸ் பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரது பெயர்களை பரிசீலிக்கிறாராம் திருமாவளவன்.
அதேபோல விசிக பொருளாளர் யூசுப் மறைந்த நிலையில் அந்த பதவிக்கும் ஒருவரை தீவிரமாக யோசித்து வருகிறாராம் திருமாவளவன்.