மகாநதி சீரியலில் யமுனா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஆதிரை விலகிய நிலையில், தற்போது புதிய நடிகை அதில் நடிக்க உள்ளார். who is the new yamuna of mahanathi serial
பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் இயக்குனர் பிரவீன் பெனட் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ’மகாநதி’.
கங்கா, யமுனா, காவேரி என சகோதரிகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொணட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் விஜய் – காவேரியின் காதல் கூடுதல் ரசிகர்களை சேர்த்துள்ளது.
இந்த நிலையில் மகாநதி சீரியலில் யமுனாவாக நடித்து வந்த நடிகை ஆதிரை தற்போது திடீரென விலகினார். இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்த 11 கால்பந்தட்டா பெண்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக மகாநதி சீரியலில் ஒரு Replacement நடந்துள்ளதாக இயக்குனர் பிரவீன் பென்னட் நேற்று தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆதிரைக்கு பதிலாக யமுனாவாக நடிக்கப்போகும் அந்த புது நடிகை யார் என எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் ஆதிரைக்கு பதில் இனி யமுனாவாக நடிகை ஸ்வேதா தான் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.