ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்தது யார்? ராமதாஸ் சொன்ன பதில்!

Published On:

| By Kavi

Who installed the wiretapping device

எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி வைத்த விவகாரத்தில் 2 நாட்களில் முடிவு கிடைக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். Who installed the wiretapping device

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில் எனது வீட்டில் நான் உட்காரும் இடம் உட்பட மூன்று இடங்களில் ஒட்டுக்கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது என்று ராமதாஸ் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக விழுப்புரம் எஸ்பி சரவணன் மற்றும் கிளியனூர் இன்ஸ்பெக்டர் கலையரசிடம் பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் ஒரு புகார் மனு கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் இன்று (ஜூலை17) தைலாபுரம் தோட்டத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 8 போலீஸ் அதிகாரிகள் இங்கு வந்து முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இன்னும் 2,3 நாட்களில் அம்பலத்துக்கு வரும்” என்றார்.

மேலும் அவர், ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்தது ஏன் நீங்களாக இருக்கக்கூடாது என்று செய்தியாளார்களிடம் நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.

மகளிர் மாநாட்டுக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் வரலாம், வரமாலும் போகலாம். பாமக மாநாட்டு பிரசுரத்தில் அன்புமணி பெயர் மற்றும் படம் வரும்… வரலாம் என்றும் தெரிவித்துள்ளார் ராமதாஸ். Who installed the wiretapping device

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share