ADVERTISEMENT

ஜிஎஸ்டி குறைப்பு….கூடுதலாக எவ்வளவு பணம் புரள்கிறது? பெ.சண்முகம் கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

Which items have reduced their prices due to GST

ஜிஎஸ்டி-யில் நான்கு அடுக்குகளாக இருந்த வரி விகிதங்கள், செப்டம்பர் 22, 2025 முதல் இரண்டு அடுக்குகளாக (5% மற்றும் 18% மட்டுமே) அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்ட பல ஆளும் கட்சியினர் ஜிஎஸ்டி வரி குறைப்பால் பொருட்களின் விலை குறையும் என கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பதிவில், “ஜி.எஸ்.டி வரிகுறைப்பினால் மக்கள் கையில் பணம் புரளும், உருளும், விலைவாசி குறையும் என்று பிரதமரும், ஒன்றிய நிதி அமைச்சரும் தம்பட்டம் அடித்தார்களே? அவர்கள் சொல்லி 10 நாட்கள் ஆகிவிட்டது.

ADVERTISEMENT

எந்தெந்த பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது. மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது என்பதை பிஜேபி தலைவர்கள் யாராவது வெளியிடத் தயாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share