ADVERTISEMENT

பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் எப்போது?

Published On:

| By Mathi

Teachers Exam

பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஓர் ஆண்டாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் ஆசிரியர்களை திமுக அரசு வதைத்து வருவது கண்டனத்திற்குரியது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.Teachers

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளதாவது: கடந்த 2023-ஆம் ஆண்டில் 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடத்தி, மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து ஒரு வருடம் ஆன பின்பும் பணி நியமன ஆணை வழங்க இயலாத அளவிற்கு திமுக அரசின் நிர்வாகம் செயலற்று இருக்கிறதா?

ADVERTISEMENT

ஒரு புறம் ஆசிரியர்கள் இன்றி பல அரசுப்பள்ளிகள் அல்லல்படும் வேளையில், மறுபுறம், கலை கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அரசு கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் உயர்கல்வித்துறை முற்றிலும் முடங்கி உள்ளது.

ஆசிரியப் பணியிடங்களை நிரப்ப வேண்டிய
@arivalayam
அரசோ, இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பது, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாதது, உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வுகளை நடத்தாது காலம் தாழ்த்துவது, கௌரவ விரிவுரையாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்காதது என தனது திறனற்ற செயல்பாட்டால் கல்வித்துறையை மேலும் சீரழித்து வருகிறது.

ADVERTISEMENT

தமிழக கல்வித்துறையின் மீதும், தமிழக மக்களின் எதிர்காலம் குறித்தும் சிறிதேனும் அக்கறை இருந்தால், இதற்கு மேலும் காலந்தாழ்த்தாமல், தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கவும், கல்லூரிகளில் போதிய பேராசிரியர்களை நியமிக்கவும் வேண்டும் என மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share