தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் நவம்பர் 26ம் தேதி கோவை வர உள்ளார்.
கோவையில் வரும் 26ம் தேதி சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பின்னர் காரில் திருப்பூர் செல்கிறார்.
பூண்டி பகுதியில் உள்ள ஹோட்டலில் நடைபெறும் எம்.எல்.ஏ செல்வராஜ் இல்லத் திருமணத்தில் பங்கேற்கிறார். அங்கிருந்து ஈரோடு செல்லும் முதல்வர் அங்கு நடைபெறும் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
அன்றிரவு அங்கேயே தங்க உள்ளார். மறுநாள் 27ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் கார் மூலம் கோவை வரும் முதல்வர் விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்.
