கரூர் பெருந்துயரம் தொடர்பான வழக்கில், இது என்ன மாதிரியாக கட்சி என்று தவெக குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இன்று (அக்டோபர் 3) நடந்த விசாரணையின் போது நீதிபதி செந்தில் குமார், ‘பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறந்துகொண்டிருக்கும்போதே, கட்சித் தொண்டர்களை விட்டுவிட்டு நிர்வாகிகள், தலைவர்கள் ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்துக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது கட்சி தலைவரின் மனநிலையை தெளிவாக காட்டுகிறது.
விஜய் பிரசார வாகனம் மோதிய போதுகூட, அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படவில்லை. காவல்துறை அவர்களுக்கு கருணை காட்டுகிறீர்களா? என்ன மாதிரியான கட்சி இது? என்று காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.