ஜாதி, மதவாத கட்சிகள் இடம் பெறும் கூட்டணியில் விசிக இருக்காது: திருமாவளவன் திட்டவட்டம்

Published On:

| By Mathi

Thirumavalavan VCK

ஜாதி, மதவாத கட்சிகள் இடம் பெறும் கூட்டணியில் விசிக ஒரு போதும் இருக்காது என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் திருமாவளவன் எம்.பி. கூறியதாவது:

ADVERTISEMENT
  • ஜாதி, மதவாத கட்சிகளுடன் விசிக ஒருபோதும் கூட்டணி வைக்காது; அந்த கட்சிகள் இடம் பெறும் கூட்டணியிலும் விசிக இருக்காது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.
  • திமுக கூட்டணியில் எந்த கட்சிகள் சேர வேண்டும் என்பதை திமுகதான் முடிவு செய்யும்; அதில் நாங்கள் தலையிடவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ மாட்டோம்.
  • திமுகவின் கூட்டணி முடிவுகளில் தலையிட விசிகவுக்கு அதிகாரம், உரிமை எதுவும் இல்லை; திமுகவுக்கு நெருக்கடி தரும் வகையிலோ அல்லது ஆலோசனை சொல்லும் வகையிலோ நாங்கள் இல்லை.
  • எந்த கட்சி கூட்டணியில் இடம் பெற்றாலும் அந்த கட்சியை பலவீனப்படுத்துவதுதான் பாஜகவின் நோக்கம். அதிமுகவுக்கு அந்த நிலைமை உருவாகி உள்ளது.
  • திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை எதிர்க்கும் வல்லமை கொண்ட ஒரு கூட்டணி இல்லை.
  • திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது; இந்த தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share