வைஃபை ஆன் செய்ததும், ”புயலடிச்சு ஓய்ஞ்சிருச்சு.. ஈரமண்ணு காயலையே” என்றபடி டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. ஏதோ பெரிய சங்கதி மாதிரி தெரியுதே?
நம்மகிட்ட இருக்கிறது எல்லாமே பெரிய சங்கதிதான்யா.. திமுக- காங்கிரஸ் கூட்டணியே கேள்விக்குறியான நிலையில், சிஎம் ஸ்டாலின் சொன்னபடி ராகுல் காந்திகிட்ட கனிமொழி பேசுனப்ப பிறகுதான் நிலைமை சுமூகமாகி இருக்கு..
இதுல அடுத்த கட்டமாக என்ன நடக்குதுன்னு சொல்றேன்யா..
என்ன குழுக்கள்- பேச்சுவார்த்தையா?
சாட்சாத் முந்திரிக் கொட்டைதான்யா.. இன்னும் திமுக குழுவே போடலையே..
டெல்லி காங்கிரஸில் ஆல் இன் ஆல் அழகுராஜான்னு சொல்லக் கூடிய கேசி வேணுகோபால் சென்னை வர்றதா இருந்தாரு.. இப்ப அவரோட புரோகிராமில சேஞ்ச் பண்ணியிருக்காங்க..
இது என்ன விவகாரம்னு காங்கிரஸ் மூத்த தலைவர்கள்கிட்ட பேசுனப்ப, “பிப்ரவரி 1-ந் தேதி கேசி வேணுகோபால் சென்னைக்கு வருவாருன்னு சொன்னாங்க.. இங்க வந்து திமுகவுடன் பேசுவாருன்னும் சொல்லி இருந்தாங்க.. ஆனா இன்னைக்கு வரைக்கும் திமுகதான் பேச்சுவார்த்தை குழுவையே போடலை.. அப்ப யாருகிட்ட என்னான்னு பேசுறது? அதனாலதான் கேசி வேணுகோபால் புரோகிராம் பிப்ரவரி 5-ந் தேதிக்கு மாறிடுச்சு.. அதுவும் புதுச்சேரிதான் போறாரு” என்கின்றனர்.
அத்துடன்,”கேசி வேணுகோபாலோட சென்னை விசிட் ரொம்பவே முக்கியமானது.. ஏன்னா டெல்லியில ராகுல்ஜியை கனிமொழி சந்திச்சு பேசுனப்ப கேசிவேணுகோபாலும்தான் இருந்தாரு..
முதல்ல ராகுல் காந்திகிட்டதான் கனிமொழி பேசுனாங்க..
இந்த பேச்சுவார்த்தையில, முதல்ல திமுக- காங்கிரஸ் கூட்டணியை உறுதி செஞ்சாங்க.. காங்கிரஸ் வேற எந்த கூட்டணிக்கும் போகலைன்னு கன்பார்ம் பண்ணிகிட்டாங்க.. அதுக்கு அப்புறமா கனிமொழி கிட்ட, “தேர்தல் வேலையை சீக்கிரமா செய்யனும்தான் நாங்க 2 மாசத்துக்கு முன்னாடியே குழு போட்டோம்.. இன்னும் நீங்கதான் குழு எதுவும் போடாம இருக்கீங்க.. ஏன்னு தெரியலை?
எனக்கும் பிரதர் ஸ்டாலினுக்குமான ரிலேசன்ஷிப் ரொம்ப நல்லாத்தான் இருக்கு.. ஆனா.. கீழே எங்க கேடர்ஸ் ரொம்பவே அப்செட்டுலதான் இருக்காங்க.. அதை எல்லாம் சரி செய்யனுமே.. உள்ளாட்சி எலக்ஷன்ல போன டைம் ரொம்ப குறைவான சீட் கொடுத்ததால அதிருப்தியில இருக்காங்க.. இதை எல்லாம் பார்த்துக்குங்க..” என்று சொல்லிவிட்டு மற்றதை எல்லாம் கேசி வேணுகோபால்கிட்ட பேசிக்குங்கன்னு ராகுல்ஜி சொல்லிட்டாரு..
அதனால கேசி வேணுகோபாலிடமும் கனிமொழி ரொம்ப டீட்டெய்லாவே பேசுனாங்க.. அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்துதான் அவரு திமுக சைடுல பேசலாம்னு ப்ளான் செஞ்சாரு.. அது தள்ளி போகுது” என்கின்றனர் காங்கிரஸ் சீனியர் தலைவர்கள்.
கேசிவேணுகோபால்- கனிமொழி பேச்சுவார்த்தையில என்ன விசேஷம்யா?
ரெண்டு பேருமே பல்வேறு லோக்கல் பிரச்சனைகளை மையமா வெச்சு டிஸ்கஷன் செஞ்சாங்க.. கடைசியா திமுக குழு போடட்டும்.. எல்லாத்தையும் பேசி சால்வ் பண்ணிக்கலாம்னு முடிவு செஞ்சாங்க.. இப்ப திமுகவோட குழுவுக்காக வெயிட்டிங்யா..
இப்படி டெல்லி தலைமை ஒரு முடிவோட அடுத்து என்ன? அடுத்து என்ன?ன்னு வேகமாக நகர்ந்தா, நம்மூர் காங்கிரஸ் கோஷ்டிகள் இடைவிடாம அதுக்கு செக் வெச்சுகிட்டே இருக்காங்கய்யா..
என்னய்யா வேதாளம் மறுபடியும் மரம் ஏறுதோ?
அப்படித்தான்யா.. சத்தியமூர்த்தி பவன்ல பேசிகிட்ட இருந்தப்பதான், “எங்கசார்.. சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி கெடுக்கிற கதையா எங்க ஆட்கள் இருக்காங்க..
திமுக கூட்டணியே கூடாது.. விஜய் கூடத்தான் கூட்டணி வெச்சாகனும்னு நினைக்கிற கோஷ்டிகளில்ல ஒன்னு, “திமுககிட்ட 2011-ல் 63 சீட் வாங்குனோம்தானே.. இப்பவும் அந்த 63 சீட்டுக்கு ஒன்னு கூட குறையாம வாங்கனும்”னு டெல்லிக்கு பிரஷர் கொடுக்குது..
இன்னொரு கோஷ்டியோ, 2016-ல் திமுககிட்ட 41 சீட் வாங்கி இருந்தோமே.. 2021-ல்தான் 25 ஆக குறைஞ்சு போச்சு.. மறுபடியும் அதே 41 சீட் வாங்காம விடக்கூடாது”ன்னு டெல்லிக்கு பிரஷர் தருதுங்க சார்..
இப்படி எல்லாம் கேட்டா திமுக கூட்டணியில இருக்க முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டேதான் இந்த வேலையை செஞ்சு பார்க்கிறாங்க” என்கின்றனர்..
ஓ.. இப்படியும் உள்ளடி வேலையா? திமுக- காங்கிரஸ் கூட்டணி கன்பார்ம் ஆகிடுச்சே.. வேற புது கட்சிகள் எண்ட்ரி?
இப்போதைக்கு திமுக- தேமுதிக பேச்சுவார்த்தைதான் ஜரூரா போய்கிட்டு இருக்கு.. அறிவாலய தரப்புல நாம விசாரிச்சப்ப, “தேமுதிக உள்ளே வர்றதால, மற்ற கூட்டணி கட்சிகளோட சீட்டு நம்பர்ஸை குறைக்க வேண்டிய நிலைமை.. இதை பத்தி விசிக, மதிமுக, லெப்ட் லீடர்ஸ்கிட்ட பேசிகிட்டு இருக்காங்க..
ஆனால் பிரேமலதா தரப்போ, எப்படியாவது டபுள் டிஜிட் வாங்கிடனும்.. அதுவும் விஜயகாந்துக்கு ராசியான 5 கூட்டுத் தொகை வர்றமாதிரியான டபுள் டிஜிட் வாங்கியாகனும்னு ரொம்பவே மெனக்கெடுது…
இந்த ‘ஏரியாவுல’ பேச்சுவார்த்தை முடிஞ்சு சீட் நம்பர்ஸ் ஓரளவுக்கு ஐடியா வந்ததுக்கு பிறகுதான் காங்கிரஸ்கிட்ட எத்தனை சீட்டுன்னு பேச முடியும்..
அதுக்குதான் சிஎம் வெயிட் பண்றாரு” என்கின்றனர்.
தேமுதிக கூட்டணிக்கு உள்ளே வந்தா நல்லா இருக்கும்னு சிஎம் நினைக்கிறதுக்கு ஒரு காரணமும் சொல்றாங்க அறிவாலய தரப்புல.. அதாவது, “2021, 24 தேர்தல்களில் திமுக- அதிமுக அணிகளுக்கு இடையேயான வித்தியாசம் 6%.. இந்த டைம் விஜய்யும் களத்துக்கு வர்றாரு.. அதனால தேமுதிக கூட்டணிக்குள்ள வர்றது கை கொடுக்கும்னு சிஎம் நினைக்கிறாரு”என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
