தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய இருக்கும் இடைக்கால பட்ஜெட் குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஆலோசனை நடத்துகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழக அரசு, இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
தேர்தல் நடைபெறும் நிலையில் இடைக்கால பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் இடம் பெறக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
