உங்கள் பகுதியில் இன்று மழை வருமா பாருங்க!

Published On:

| By Minnambalam Desk

weather update today in tamilnadu

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. weather update today in tamilnadu

தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ADVERTISEMENT

சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளதாகவும், சாலைகளில் வழுக்கும் வகையில் மழை பெய்ய கூடும் என்ற கூறப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share