சென்னையில் 3 நாள் குடிநீர் விநியோகம் ரத்து… அவசர தேவைக்கு என்ன செய்வது?

Published On:

| By christopher

Water supply canceled for 3 days in Chennai

சென்னை மாநகராட்சியின் 7 முதல் 13 வரையுள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Water supply canceled for 2 days in Chennai

சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி இருந்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக 3 நாட்களுக்கு சென்னை மாநகராட்சியின் 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் இன்று (ஜூலை 26) வெளியிட்ட அறிக்கையில், “செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2000 மி.மீ விட்டமுடைய 2வது வரிசை பிரதான குடிநீர் குழாயினை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 2000 மி.மீ குடிநீர் பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

ADVERTISEMENT

அதன்படி வரும் 30.07.2025 அன்று காலை 08.00 மணி முதல் 01.08.2025 இரவு 10.00 மணி வரை மண்டலங்கள் -7 (அம்பத்தூர்), 8 (அண்ணா நகர்), 9 – (தேனாம்பேட்டை), 10 – (கோடம்பாக்கம்), 11 – (வளசரவாக்கம்), 12 (ஆலந்தூர்), 13 (அடையாறு) மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து
வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share