இந்திய பெருங்கடலில் வெடித்த யுத்தம்! 4,000 கி.மீ தொலைவில் இருந்து டிகா கார்சியோ தீவு மீது ஏவுகணைகளை வீசிய ஈரான்!

Published On:

| By Mathi

Iran Diego Garcia

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் யுத்தம் வெடித்துள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. இந்தப் பதற்றத்தின் உச்சமாக, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டு ராணுவத் தளமான டிகா கார்சியோ (Diego Garcia) மீது ஈரான் இன்று மார்ச் 21ந் தேதி இரண்டு நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை நோக்கி ஏவுகணைகளை ஏவியதன் மூலம், நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள் ஈரானிடம் இருப்பது உலக நாடுகளுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் இலக்கை அடையவில்லை என்றாலும் – ஒன்று நடுவானிலேயே செயலிழந்தது, மற்றொன்றை அமெரிக்கப் போர்க்கப்பல் இடைமறித்து அழித்தது – இந்தத் தாக்குதல் இந்தியப் பெருங்கடலின் அமைதியை அச்சுறுத்தும் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

அண்மையில் இந்தியாவிற்குப் பயிற்சிக்கு வந்து சென்ற ஈரானிய போர்க்கப்பல் ஒன்று, இந்திய எல்லைக்கு வெளியே அமெரிக்காவால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவம் ராஜதந்திர வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. டிகா கார்சியோ மீதான தாக்குதல், போர் இந்தியாவிற்கு மிக அருகில் வந்துவிட்டது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share