‘மோடி மேடையில்’ ஜனவரி 23-ல் என்ன நடக்கும்னு பாருங்க.. நயினார் ‘ட்விஸ்ட்’

Published On:

| By Mathi

Nainar Nagendran

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 23-ந் தேதி பங்கேற்கும் மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் விவரம் தெரிய வரும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று ஜனவரி 18-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ”தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார கூட்டத்துக்காக ஜனவரி 23-ந் தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார்.

ADVERTISEMENT

தமிழகத்தில் ஆட்சியில் இருந்து திமுக அரசை அகற்ற வேண்டும்; தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” என்றார்.

அப்போது ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணிக்கு வருவார்களா? என்ற கேள்விக்கு, ”பிரதமர் மோடி பங்கேற்கும் 23-ந் தேதி பொதுக் கூட்டத்தில் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பாருங்கள்” என்றார் நயினார் நாகேந்திரன்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share