மக்களவைத் தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக, வாக்குகளை திருடி இருப்பதாக அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi Vs Election Commission of India) திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
டெல்லியில் இன்று ஆகஸ்ட் 7-ந் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியதாவது:
- மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல மாநில சட்டமன்ற தேர்தல்களில் களநிலவரம், கருத்து கணிப்பு, எக்ஸிட் போல் ஆகியவை ஒரே மாதிரியாகவும் தேர்தல் முடிவுகள் மட்டும் தலைகீழாக மாறியும் இருந்ததற்கு காரணம் வாக்குகள் திருட்டுதான்.
- கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 1 லட்சம் வாக்காளர்கள் மோசடியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
- அத்தொகுதியில் ஒரே முகவரியில் 10,452 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
- புதிய வாக்காளர் படிவத்தை 33,692 பேர் முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர்
- கதவு எண், தெரு எண் பூஜ்ஜியம் என குறிப்பிட்டு ஆயிரக்கணக்கான வாக்காளர்களை சேர்த்துள்ளனர்.
- குர்கிராத் சிங் டாங் என்பவர் பெயர் 4 வாக்குச் சாவடிகளில் ஒரே போட்டோ, ஒரே பெயருடன் இடம் பெற்றிருக்கிறது.
- போலி மற்றும் தவறான முகவரிகள் மூல்ம் 40,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
- தவறான போட்டோக்களுடன் 4132 பேர் வாக்காளர்களாக்கப்பட்டுள்ளனர்.ஒரே படுக்கை கொண்ட வீட்டில் மட்டும் 48 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்
- ஏதாவது ஒரு ஆங்கில எழுத்தை தந்தை பெயராக குறிப்பு ஆயிரக்கணக்கான வாக்காளர்களை சேர்த்துள்ளனர்.
- பீர் தொழிற்சாலை முகவரியில் மட்டும் 68 வாக்காளர்கள் இருப்பதாக சொல்கிறது வாக்காளர் பட்டியல்.
- முதன் முறை வாக்காளராக ராணி என்ற மூதாட்டி ஒருவரை சேர்த்துள்ளனர்; 70 வயதுக்கு மேற்பட்ட பலர் முதல் முறை வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்
- வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் போட்டோக்கள் இல்லை.
- தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் இருந்துதான் இவை எடுக்கப்பட்டவை.
- தேர்தல் ஆணையம் என் குற்றச்சாட்டுகளை மறுக்காது; என் மீது நடவடிக்கையும் எடுக்காது; ஏனெனில் தேர்தல் ஆணையத்துக்கும் நான் சொல்வது அனைத்தும் உண்மை என தெரியும்.
- என்னுடைய குற்றச்சாட்டுகளையே இந்திய தேர்தல் ஆணையம் என்னுடைய வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம்
- இந்திய தேர்தல் ஆணையம், வாக்குகளைத் திருடுவதற்கு பாஜகவுக்கு உதவுகிறது.
- கர்நாடகா வாக்காளர் பட்டியல் முறைகேடுகளைக் கண்டித்து ஆகஸ்ட் 8-ந் தேதி பேரணி நடைபெறும்.