வாக்கு திருட்டு: ராகுல் காந்தி மீது விமர்சனம்.. கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் ராஜண்ணா பதவி பறிப்பு!

Published On:

| By Mathi

Karnataka Rajanna

வாக்குகள் திருட்டு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்த கர்நாடகா அமைச்சர் ராஜண்ணா, அம்மாநில அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை விரிவாக விளக்கி பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறார் ராகுல் காந்தி. இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT

டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற இந்தியா கூட்டணியின் 300 எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜண்ணா, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை விமர்சித்திருந்தார். அதாவது, வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் என்பது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் நடந்தது; அதை கண்டுகொள்ளாமல் இருந்ததற்காக நாம்தான் வெட்கப்பட வேண்டும் என கூறியிருந்தார்.

ADVERTISEMENT

ராகுல் காந்தியின் கருத்துக்கு காங்கிரஸ் அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்தது கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கர்நாடகா அமைச்சரவையில் இருந்து ராஜண்ணாவை முதல்வர் சித்தராமையா இன்று டிஸ்மிஸ் செய்தார்.

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவர் ராஜண்ணா. இதனால் சித்தராமையாவுக்கும் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா அமைச்சரவையில் மொத்தம் 3 பழங்குடி இன அமைச்சர்கள் இருந்தனர். இவர்களில் ஊழல் புகாரில் சிக்கி நாகேந்திரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்; தற்போது ராஜண்ணா, அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share