டிஜிட்டல் திண்ணை: ஓட்டு பர்சேஸ்.. ரூ6,000 கோடி பட்ஜெட்.. ஆட்சி கனவில் மிதக்கும் எடப்பாடி

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும் “நம்பிக்கைதானப்பா அரசியல்” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

என்னய்யா.. எதையோ விலாவாரியாக சொல்லப் போறீரா?

ADVERTISEMENT

ஆமாய்யா.. தவெக பொதுக்குழுவுல , “விஜய்தான் முதல்வர் வேட்பாளர்; கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு அதிகாரம்” தருவதாக தீர்மானம் போட்டிருந்தாங்க இல்லையா? அதன் எபெக்ட்ஸ் பத்தி நேத்து பேசினோமே..

ஆமா.. இன்னுமா எபெக்ட்ஸ் வந்துகிட்டே இருக்கு?

ADVERTISEMENT

யெஸ்.. தவெக பொதுக்குழு முடிஞ்ச பின்னாடி எடப்பாடி பழனிசாமியை ஒரு குரூப் சந்தித்து பேசினாங்க.. அதாவது திமுக ஆட்சி மீண்டும் வரக் கூடாது; அதிமுக ஆட்சி வரனும்னு நினைக்கிற குரூப் அது.. இந்த குரூப்கிட்ட எடப்பாடி சொன்ன விஷயங்கள்தான் ரொம்ப முக்கியமானது…

அப்படி என்ன சொன்னார் எடப்பாடி?

ADVERTISEMENT

எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசுனப்ப, “அண்ணனை (இபிஎஸ்) சந்தித்த குரூப்பிடம் ரொம்பவே மனம் விட்டு பேசினாரு.. அப்போ, “நம்ம கூட்டணிக்கு விஜய் வரமாட்டாருன்னு உறுதியாக சொல்லிகிட்டு இருந்தேன்..

விஜய்யைப் பொறுத்தவரைக்கும் அவரு ஒரு கனவுலகத்துல இருக்கிறாரு.. நம்மைவிட ரொம்ப பெரிய கட்சின்னு அவராக நினைச்சுக்கிறாரு..

விஜய்கிட்ட நம்ம தம்பி (எடப்பாடி மகன் மிதுன்) பேசும் போது கூட, அவரு என்னமோ சிஎம் மாதிரியும் நாம என்னமோ டெபுடி சிஎம் மாதிரியும்தான் பேசியிருந்தாரு….

அதனாலதான் 4, 5 மாசத்துக்கு முன்னாடியே, விஜய் நம்ம கூட்டணிக்கு வரமாட்டாருன்னு உறுதியாக சொன்னோம்..

அமித்ஷாதான் விஜய்யை நான் கூட்டணிக்கு கூட்டிகிட்டு வர்றேன்னு சொன்னாரு..

ஆனால் இப்ப, அமித்ஷா தரப்பில இருந்தே 10 நாளுக்கு முன்னாடியே, நம்ம கூட்டணிக்கு விஜய் வருவாருன்னு எதிர்பார்க்க முடியாதுன்னு தகவல் சொல்லி அனுப்பிட்டாங்க..

நம்மை பொறுத்தவரைக்கும் விஜய்யால நமக்கு பெரிசா எந்த பிரயோஜனும் இல்லை.. நமக்கு 2021 சட்டமன்ற எலக்‌ஷனில் இருந்த கூட்டணியே போதுமானது.. நிச்சயமா ஆட்சியை அமைச்சுடலாம்னு அமித்ஷாகிட்ட சொன்னோம்… அமித்ஷாதான் விஜய் வருவாருன்னு சொன்னதாலதான் நாமும் அமைதியாக இருந்தோம்..

நமக்கு வர்ற தகவல் எல்லாமே நாமதான் ஆட்சி அமைப்போம்னுதான் சொல்லுது.. பாமக, பாஜகன்னு நம்ம கூட்டணி அப்படியே இருந்தாவே போதும் ஈஸியாக ஜெயிச்சுடுவோம்..

அவ்வளவு ஏன், திமுகவில இருக்கிற சீனியர்கள்.. பல தேர்தல்களை ரொம்ப வருஷமாக பார்த்துகிட்டு இருக்கிறவங்க கூட, அவங்க மீண்டும் ஆட்சிக்கு வருவது சந்தேகம்தானு சொல்றாங்க..

சில உளவுத்துறை அதிகாரிங்க, ஐஏஎஸ் ஆபீசர்ஸ்தான் ஸ்டாலின் கிட்டயும் அவங்க குடும்பத்துல உள்ளவங்ககிட்டயும் திமுகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும்னு சொல்லிகிட்டு இருக்காங்க..

அவங்களும் கூட அதையே நம்பிகிட்டு இருக்காங்களாம்.. இந்த நம்பிக்கையிலதான் ஒரு ஓட்டுக்கு ரூ 1,000 கொடுக்கலாம்னு பிளான் போட்டதை கூட, அசால்ட்டா ஜெயிப்போம்ல.. ரூ500 கொடுத்தா போதும்னு நினைச்சுகிட்டு இருக்காங்களாம்.. அப்படியே அவங்க மிதப்புல இருக்கிறதுதான் நமக்கும் கூட ரொம்ப நல்லது..

நாமும் சென்ட்ரல்ல பேசிகிட்டு இருக்கிறோம்.. ஒரு ஓட்டுக்கு ரூ,1000-ன்னு வெச்சாலும் ஒரு தொகுதிக்கு ரூ20 கோடி தேவை.. 234 தொகுதிகளுக்கு தலா ரூ20 கோடின்னு வெச்சாலும் குறைந்தது ரூ5000 கோடி நெருங்குது..

ஆளும் கட்சியாக இருக்கிற திமுக காசை செலவு செய்ய யோசிக்குது.. நாம அப்படி இருக்க முடியாதுல்ல.. அப்பவே அமைச்சராக இருந்தவங்ககிட்ட நாம பண்ட் வாங்கலை.. தொகுதியில எலக்‌ஷன் செலவை பார்த்துக்க சொன்னோம்..

அம்மா வந்து என்ன செய்யுவாங்கன்னா, கடைசி நேரத்துல ரொம்ப டப்பாக இருக்கிற, ரொம்ப வீக்காக இருக்கிற பூத்கள் பற்றி தகவல் வரும்.. அப்ப அந்த ஏரியாவுல மட்டும் அதிகமாக பணம் கொடுக்க சொல்வாங்க.. நாமும் இது எல்லாத்துக்கும் ரெடியாத்தான் இருக்கிறோம்..

நம்ம தேர்தல் செலவு ரூ5,000சி-ல் இருந்து ரூ6,000 சி வரைக்கும் போகும்..

ஆளும் கட்சி மேல மக்களுக்கு அதிருப்தி அதிகமாகிட்டே இருக்கு.. அதனால நிச்சயமாக நம்மோட ஆட்சிதான் அடுத்து அமையப் போகுது.. அதுல சந்தேகமே இல்லை..

ஓபிஎஸ், டிடிவி, சசிகலா பிரச்சனை எல்லாம் தேர்தல் நேரத்துல சரியாகிடும்.. இந்த பிரச்சனைகளையும் பாமக பிரச்சனையையும் பாஜகவே சரி செஞ்சிவிடும்.. அதே மாதிரி அண்ணாமலையையும் பாஜகவே கண்ட்ரோல் செஞ்சுடும்..

ஆனா பாருங்க.. திமுக கூட்டணியிலதான் பிரச்சனை பெரிசாகும்.. ” என ரொம்பவே நம்பிக்கையாகவும் திமுக கூட்டணி பற்றி புதிராகவும் சொல்லி அனுப்பினார் அண்ணன் (எடப்பாடி)” என சொல்வதாக டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share