’இதுதான் பெஸ்ட் டிரெய்லர் கட்’ – தலைவன் தலைவி-யை கொண்டாடும் ரசிகர்கள்!

Published On:

| By christopher

vjs nithya thalaivan thalaivi trailer gets claps

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள தலைவன் தலைவி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. vjs nithya thalaivan thalaivi trailer gets claps

குடும்பப் படங்களுக்கு பெயர்போன இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவன் தலைவி. விஜய் சேதுபதி – நித்யா மேனன் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.

அவர்களுடன் யோகிபாபு, மைனா, சரவணன், ஆர். கே. சுரேஷ், காளி வெங்கட், தீபா சங்கர், அருள்தாஸ், ரோஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஏற்கெனவே இப்படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

இந்த நிலையில் இன்று மாலை டிரெய்லர் வெளியானது. திருமணத்திற்கு பின் கணவன் – மனைவி இருவருக்கிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளையும், குடும்பத்தில் நிலவும் சிக்கல்களையும் அவ்வளவு இயல்பாக பேசுகிறது என்பது டிரெய்லரிலேயே தெளிவாக காட்டுகிறது.

அதோடு சந்தோஷ் நாராயணனின் இசையும், பிரதீப் ராகவ்வின் படத்தொகுப்பும் டிரெய்லரை இன்னும் சுவாரசியமாக காட்டியுள்ளது.

மேலும், யோகிபாபு, தீபா சங்கர், ரோஷினி, மைனா ஆகியோரின் இருப்பும் படத்திற்கும் பலம் சேர்க்கும் என்பதை உறுதியாக நம்பலாம்.

இதற்கிடையே, விஜய் சேதுபதி – நித்யா மேனன் ஜோடி, ச.நாவின் இசை என பலவற்றையும் குறிப்பிட்டு படத்தின் டிரெய்லருக்கு பாராட்டுகள் சமூகவலைதளத்தில் குவிந்து வருகின்றன.

கடந்தாண்டு மகாராஜா திரைப்படம் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்தாண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் ஜூலை 25ஆம் தேதி வெளியாக இருக்கும் தலைவன் தலைவி மீண்டும் அவருக்கு வெற்றிப்படமாக அமையும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Thalaivan Thalaivii - Trailer | Vijay Sethupathi, Nithya Menen | Pandiraaj | Santhosh Narayanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share