தமிழகத்தில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சி செயலர் பணிக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை தவிர அனைத்து மாவட்ட ஊராட்சிகளில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பணிக்கு இன சுழற்சி முறையில் தேர்வு செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பதவி : கிராம ஊராட்சி செயலர்
காலிப்பணியிடங்கள்: 1,483
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09.11.2025.
கல்வி தகுதி : 10 ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 32 வரை. பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி வகுப்பினருக்கு வயது வரம்பு 34, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 37 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. (எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50.)
மாவட்ட வாரியாக காலியிடம் உள்ளிட்ட முழு விவரங்களை www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம்.