நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர், நீ அரியணை ஏறும் நாள் வரும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதுரை பாரபத்தியில் இன்று மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. அக்கட்சியின் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். மாநாடு நடைபெறும் பகுதியில் கடும் வெயில் உள்ள போதும் தொண்டர்கள் தொடர்ந்து வரத் துவங்கி உள்ளனர். மாநாட்டு பகுதிக்கு வந்த சிலர் வெயிலின் தாக்கத்தால் மயக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மாநாட்டு பந்தலுக்கு விஜய்யின் தந்தை சந்திர சேகர் மற்றும் தாய் ஷோபா வந்துள்ளனர்.
விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“ முதல் மாநாடு உன் பலத்தை காட்டியது.. மதுரை மாநாடு உன் படை பலத்தை காட்டுகிறது- திரையில் உன்னை பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி, தங்கைகள், அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும். வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியைக் காட்டும். நீ அரியணை ஏறும் நாள் வரும். அது உன் தொண்டர்களின் திருநாள். தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்று காட்டு, நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு. உன்னோடு வரும் தொண்டர்கள் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை. உன் வெற்றிக்கு வானமே எல்லை” என்று தெரிவித்துள்ளார்.