விஜய்யுடன் சேர்ந்தால் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் பவர் கிடைக்கும் – எஸ். ஏ. சந்திரசேகர்

Published On:

| By Pandeeswari Gurusamy

விஜய்யுடன் சேர்ந்தால் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் பவர் கிடைக்கும் என இன்று (ஜனவரி 28) இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திர சேகர் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், ஆளும் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு வருவதால், கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி நேரில் விஜயைச் சந்தித்து பரபரப்பை கிளப்பினார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தரப்பில் இருந்து பலரும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கேட்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கூட்டணி தொடர்பாக திமுக முடிவெடுக்க இரண்டு மாதங்களாக காங்கிரஸ் கட்சி காத்திருப்பதாக அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இயக்குநரும், விஜயின் தந்தைபுமான எஸ்.ஏ. சந்திரசேகர், “தவெகவுடன் சேர்ந்தால் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் பவர் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ சந்திரசேகர், “ஒரு வரலாறு இருக்கிற கட்சி இன்று ஏன் தேய்ந்து போய்விட்டது? பவர் இல்லை. ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து, ஆதரவு கொடுத்து இவர்கள் தேய்ந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள். அந்த ஒரு பவரை நாங்கள் கொடுக்கிறோம் என்று சொல்கிறோம். நாங்கள் இல்லை, விஜய் அவர்கள் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். அந்த பவருக்கு நீங்கள் வந்தீர்கள் என்றால், காங்கிரஸ் மறுபடியும் அந்த வரலாற்றைத் தக்க வைத்துக் கொள்ளும். இந்த வாய்ப்பை அவர்கள் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share