தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் நடிகை திரிஷாவும் ஒன்றாக திருமண விழாவில் பங்கேற்றிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கிறார் நடிகர் விஜய்.
இந்த நிலையில் அவரைச் சுற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் விஜய் நடிகை ஒருவருடன் ஒன்றாக வெளிநாடுகள் சென்று வருகிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அந்த நடிகை திரிஷா தான் என்று கூறப்பட்டது.
இப்படியாக விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில் விஜய்யும் த்ரிஷாவும் திருவான்மையூரில் நடைபெற்ற ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமணத்தில் ஒன்றாக ஒரே காரில் வந்து கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக விஜய்யும் திரிஷாவும் ஒரே நிறத்தில் உடை அணிந்து ஜோடியாக வந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
