கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஜனவரி 19-ந் தேதி 2-வது முறையாக விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் உள்ளிட்டோரிடமும் கரூர் ஆட்சியர் தங்கவேல், எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த 12-ந் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய்யிடம் மீண்டும் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவதற்காக சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் டெல்லி சென்றார் விஜய். இன்று காலை சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகிறார். அங்கு சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு விஜய் பதிலளிக்க இருக்கிறார்.
