நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனக்கு எதிராக வைரலாகி வரும் வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த புகாருக்கு, விஜய் சேதுபதி மன்னிப்பு கோரியுள்ளார். vijay sethupathi ask sorry for his son
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் இயக்கியுள்ள பீனிக்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படம் நாளை (ஜூலை 4) வெளியாக உள்ளது.
இதனையொட்டி சென்னை ராயப்பெட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நேற்று இரவு திரைபிரபலங்களுக்காக படம் திரையிடப்பட்டது.
இதற்கிடையே பீனிக்ஸ் பட விழாக்களில் பேசி வரும் சூர்யா சேதுபதியை விமர்சித்து சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியானது. அதனை வெளியிட்டவர்களில் சிலரை அழைத்து சூர்யா தரப்பு, அந்த வீடியோக்களை நீக்கச் சொல்லி மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக நேற்று நடிகரும், சூர்யாவின் தந்தையுமான விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “தம்பிமாருங்க தெரியாமல் பண்ணிருப்பாங்க. எங்கள் தரப்பில் இருந்து யாருக்கேனும் அழைப்பு வந்து மிரட்டல் நடந்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்” எனத் தெரிவித்தார்.