தவெக மாநாடு நடைபெற்று வரும் நிலையில் ரேம்ப் வாக் சென்ற தவெக தலைவர் விஜய் தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
தவெக இரண்டாவது மாநாடு இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்று வருகிறது. மாநாட்டு மேடைக்கு வந்த விஜய் தொண்டர்களை சந்திப்பதற்காக ரேம்ப் வாக் சென்றார்.
இதற்காக அமைக்கப்பட்ட ரேம்ப் பாதையில் சென்று கொண்டிருந்த போது, தொண்டர்கள் தடுப்பை தாண்டி குடித்து விஜய் அருகே ஓடி வந்தனர்.
அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள் திணறினர். மேலே ஏறியவர்களை கீழே இறங்குமாறு விஜய்யும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து சிறிது தூரம் தொண்டர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் கட்சி கொடியை தலையில் கட்டிக்கொண்டு சென்ற விஜய், மாநாட்டு திடலில் கூடியிருந்தவர்களுடன் தனது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
இதையடுத்து மேடைக்கு வந்த அவர், வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோர் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார்.