தமிழக வெற்றிக் கழக மா.செ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (மார்ச் 13) 132 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சட்டமன்றத் தேர்தலை கூட்டணி வைத்து சந்திக்கலாமா? அல்லது தனித்து போட்டியிடலாமா? என மா.செ.க்களிடம் கேட்டிருக்கிறார். இதற்கு பெரும்பாலோனோர் கூட்டணி வைத்தே போட்டியிடலாம் என்று கூற, சரி தளபதிகிட்ட பேசிவிட்டு முடிவெடுப்போம் என்று கூறியிருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்.
அதோடு மற்றொரு விஷயமும், இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதாவது, திருச்சியில் விரைவில் ஒரு மாநாட்டை நடத்துவது, அதற்கு கூட்டத்தை கூட்டுவது என ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கல் வருகின்றன.
மேலும், தேர்தல் வேலைகளை எப்படி பார்ப்பது என பேசப்பட்டதே தவிர என்.டி.ஏ.வுடன் கூட்டணி எனப்தெல்லாம் வதந்திதான் என்கின்றனர் தவெக தரப்பில்.
ஏற்கனவே மார்ச் 9ஆம் தேதி திமுகவும், அதைத்தொடர்ந்து மார்ச் 11ஆம் தேதி என்.டி.வு-ம் திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தின என்பது குறிப்பிட்டத்தக்கது.
