எனது சொந்த பிரச்சினைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்… நீங்கள் வருத்தப்பட வேண்டாம் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினம் மாமல்லபுரத்தில் இன்று (மார்ச் 7) கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட அக்கட்சி தலைவர் விஜய் 2026ஆம் ஆண்டுக்கான முதல்கட்ட வாக்குறுதிகளை வெளியிட்டார்.
தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து பேசிய விஜய், “ரீசன்டா இருக்கிற நிறைய பிரச்சனைகள்ல சில பிரச்சனைகள் ஓடிட்டு இருக்கு இல்லையா? நீங்க அதுக்காக போராடி ஹர்ட் ஆகுறதெல்லாம் நான் பாக்குறேன். அதைப்பார்த்து எனக்கு ஹர்ட் ஆகுது. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நாமெல்லாம் சேர்ந்து மக்களுடைய பிரச்சனைகளை மட்டும் பார்ப்போம்.
சரிங்களா? அவ்வளவுலாம் ஹர்ட் ஆகாதீங்க. அவ்ளோ வொர்த்து கிடையாது. சரியா? கான்பிடென்ட்டா இருங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என கூறினார்.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து பிரச்சாரத்துக்கு செல்ல தொடங்கியது முதல் பல்வேறு விமர்சனங்களை விஜய் எதிர்கொண்டு வந்த நிலையில், தற்போது அவரது சொந்த வாழ்க்கையிலும் பிரச்சினையை சந்தித்து வருகிறார்.
விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டுள்ள அவரது மனைவி சங்கீதா, தனது கணவர் ஒரு நடிகையுடன் வெளிநாடுகள் சென்று வருவதாகவும், அந்த நடிகை சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு மன உளைச்சளை ஏற்படுத்துவதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
