2026 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டில் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் அருகில் காலை 8.45 மணிக்கும், கரூர், வேலுச்சாமிபுரத்தில் நண்பகல் 12.00 மணிக்கும் இன்றும் அவர் பரப்புரை மேற்கொள்ள போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர்.
அதன்படி இன்று காலை முதலே கே.எஸ்.திரையரங்கம் பகுதியில் தொண்டர்கள் பெருமளவில் குவிந்து வருகின்றனர்.
விஜய்யின் பிரச்சாரத்திற்காக கே.எஸ்.திரையரங்கம் அமைந்துள்ள சேலம் – நாமக்கல் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் அதிகரித்து வரும் தொண்டர்களின் கூட்டம் காரணமாக அச்சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யபட்ட வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே காலை 8.45 மணிக்கு தான் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டுள்ளார் விஜய். அங்கிருந்து சாலை வழியாக நாமக்கல் பிரச்சார பகுதிக்கு செல்ல சுமார் 2 மணி நேரம் ஆகும் நிலையில் நண்பகல் 12 மணிக்கு தான் அங்கு விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் என்கின்றனர் தவெக நிர்வாகிகள்.